பெங்களூரு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை கர்நாடகாவில் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் விரட்டி அடிப்போம் எனக் கூறி உள்ளார்.

வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி மாநிலம் முழுவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்.    அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரைக் காண கூட்டம் அலைமோதுவதால் காங்கிரஸ் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் என்னும் நம்பிக்கையில் ராகுல் காந்தி உள்ளார்.

ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பெங்களூருவில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாகக் கூறினார்.   ஆனால் நாடெங்கும் ஊழலை அதிகரித்துள்ளார்.  பாஜக வும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் சும் இணைந்து நாட்டை பாழாக்கி வருகிறது.   இட ஒதுக்கீட்டை முழுவதுமாக ஒழிக்க திட்டம் தீட்டி வருகிறது.   இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

இன்னும் 10 நாட்களில் முடிவு முழுவதுமாக தெரிந்து விடும்.  முதலில் கர்நாடகாவில் இருந்து பாஜகவை விரட்டுவோம்.   பிறகு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து விரட்டுவோம்.   முடிவாக இந்தியாவை விட்டே பாஜக வை விரட்டி அடிப்போம்.

மோடி கடந்த 70 வருடங்களாக அரசு ஒன்றும் செய்யவில்லை எனக் கூறுகிறார்.  பெங்களூருவில் இத்தனை தொழிற்சாலைகளையும் நீங்கள் கொண்டு வந்திர்களா? அல்லது உங்கள் பெற்றோர்கள் கொண்டு வந்தனரா?  இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸில் தொடந்தி பல ஐடி நிறுவனங்களை உங்கள் பெற்றோர்கள் தான் அமைத்தார்களா? ” என கூட்டங்களில் பேசி உள்ளார்.