தொடர்ந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வோம்!: பிரதமர் மோடி

Must read

 

மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய மக்களஉக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் அதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், இந்திய மக்களுக்காக தொடர்ந்து உத்வேகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மத்திய அரசு சேவை செய்யும்  என்று தெரிவித்துள்ளார். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையோடு செயல்படுகிறது என்றும், அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு திட்டங்களுக்கு கடந்த 4 வருடங்களில் தனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும்  பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article