“விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் மோடி வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம்” என்று,  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் , மரபணு மாற்று விவசாயத்தின் கெடுதல்குறித்து விழிப்புஉணர்வு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் அய்யாக்கண்ணு.  தேவகோட்டை வந்த  அவர், அய்யாக்கண்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “நீதிமன்ற அனுமதிபெற்று மரபணு மாற்று விவசாயத்தைத் தடைசெய்ய, வலியுறுத்திவரும் எங்களை பா.ஜ.க-வினர் தாக்க முனைகிறார்கள்.  இதனால் இது ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவழிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டில்லியில் பிரதமர் வீட்டு வாசல் முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளவோம்” என்றார்.