மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று, இன்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

பீகாரின் மதுபனியில் ரூ.13,480 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன், சிறப்பு வகை தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2025 வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராம மற்றும் நகர்ப்புறம் இரண்டும்) மற்றும் தீன் தயாள் உபாத்யாய அந்த்யோதயா யோஜனா–தேசிய கிராமப்புற வாழ்வாதார மிஷன் (DAY–NRLM) ஆகியவற்றின் கீழ் நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி விநியோகித்தார்.
தொடர்ந்து, .காலநிலை நடவடிக்கை சிறப்பு பஞ்சாயத்து விருது (CASPA), ஆத்மா நிர்பார் பஞ்சாயத்து சிறப்பு விருது (ANPSA)களை வழங்கினார். பஞ்சாயத்து க்ஷம்தா நிர்மான் சர்வோத்தம் சன்ஸ்தான் ஆகியவை இதில் அடங்கும். பீகார் மாநிலம் மதுபானியில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பீகார் மாநிலம் மதுபானியில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் நலத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று, பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, முழு நாடும் மிதிலா மற்றும் பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று, நாட்டின் மற்றும் பீகாரின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தொடக்க விழா இங்கு நடத்தப்பட்டுள்ளது. மின்சாரம், ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான இந்த பல்வேறு பணிகள் பீகாரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.” என்றார்.
தொடர்ந்து பேசியவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாக விமர்சித்தார் “இன்று, பீகார் மண்ணில், உலகம் முழுவதும் இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்து தண்டிக்கும் என்று நான் கூறுகிறேன்.
இந்தியா ஒவ்வொரு தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் கண்டறிந்து, தண்டிக்கும், அவர்களை பூமியின் கடைசி வரை துரத்துவோம். பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஆவி ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. இந்த தேசம் முழுவதும் நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவர்களின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.” எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்..

தண்டனை குறிப்பிடத்தக்கதாகவும் கடுமையானதாகவும் இருக்கும், இந்த பயங்கரவாதிகள் இதைப் பற்றி ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்…” என்று கூறினார்.
முன்னதாக, பயங்கரவாதிகளை தேடி சென்ற தேடுதல் குழுவினர் பெரோலே பகுதிக்கு சென்றபோது, அவர்கள்மீது மறைந்திருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது இதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்அடைந்தார்.
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நேபாள நாட்டவர் உட்பட இருபத்தி எட்டுபேர் பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த பல ஆண்டுகளில் காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இதனிடையே, பஹல்கம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகள் குழுவுக்கும் இடையே இன்று காலை (வியாழக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சில நாட்களாக அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தேடுதல் குழுவினர் பெரோலே பகுதிக்கு சென்றபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த பகுதி பசந்த்கரில் இருந்து சுமார் மூன்று மணி நேர நடைபயண தூரத்தில் உள்ளது. கோடை மாதங்களில் கால்நடைகளை மேய்ப்பதற்காக நாடோடிகளால் இப்பகுதி பயன்படுத்தப்படுகிறது.
இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக, வடக்கு காஷ்மீரின் உரி செக்டாரில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் ஒரு நீரோடை வழியாக பள்ளத்தாக்கிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் குழுவை ராணுவம் புதன்கிழமை அதிகாலை கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது.
துருப்புக்கள் ஊடுருவ முயன்றவர்களை எச்சரித்தபோது, அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ஏவுகணையை தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், எதையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில். பொதுமக்கள் வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மக்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி உரையாற்றிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத செயலை கடுமையாக சாடியதுடன், இந்த கொடிய சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களும் “சதித்திட்டத்தின் ஒரு பகுதியினரும்” “அவர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
“இன்று, பீகார் மண்ணிலிருந்து, முழு உலகிற்கும் நான் கூறுகிறேன், இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும். பூமியின் முனைகள் வரை அவர்களைத் துரத்துவோம். இந்தியாவின் ஆவி பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது,” என்று அவர் மதுபனியில் கூடியிருந்த கூட்டத்தில் கூறினார்.
நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். “மனிதகுலத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர் என்றார்.
“இந்த பயங்கரவாதிகளுக்கும் இந்த தாக்குதலுக்கு சதி செய்தவர்களுக்கும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்…” “ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் கொன்ற கொடூரத்தால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தமடைந்துள்ளது… இந்த பயங்கரவாதிகளுக்கும் இந்த தாக்குதலுக்கு சதி செய்தவர்களுக்கும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும்…” என்றார்.
தனது உரையைத் தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி, பொதுமக்களுடன் சேர்ந்து, செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட 26 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.