பெங்களூரு: மத்தியஅரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

கர்நாடக முதல்வராக கடந்த வாரம் பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை நேற்று மைசூர் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மைசூரு தசரா விழா குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.  அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் 19 வழக்குகளை அரசு கவனித்து, உயர் அதிகாரக் குழுவில் தசரா கொண்டாட்டத்தைப் பற்றி விவாதித்து  அறிவிக்கப்படும் என்றார். கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறியவர், கொ ரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை ஆணையர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், . அவர் கட்டாய கோவிட் சோதனைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து மேகதாது அணை குறித்து தமிழகத்தை கடுமையாக சாடினார்.  . மேகதாதுவில் அணை கட்ட மத்தியஅரசிடம் அனுமதி கோரியிருக்கிறோம், அதற்கான திட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியஅரசு விரைவில் அனுமதி வழங்கும். இதனால் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி. அ‘

தண்ணீர் விஷயத்தில் தமிழ்நாடு அரசும் சரி, அங்குள்ள கட்சிகளும் சரி எப்போதும் அரசியல் செய்து வருகிறது. காவிரி நதிநீர் விஷயத்திலும் அரசியல் செய்தது. தற்போது மேகதாது அணை விவகாரத்திலும் தமிழ்நாடு  அரசியல் செய்து வருகிறது. இந்த அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டியே தீருவோம்.

இந்த விவகாரத்தில் சட்டகுழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன். . காவிரி படுகைகளில் உபாிநீரை கர்நாடகம் பயன்படுத்துவது குறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் சட்ட நடவடிக்கை எடுப்பார்.

இந்த அணை திட்டம் முழுக்க, முழுக்க விவசாயிகள் நலனுக்கானது. இதில் அரசியல் இல்லை. மேகதாது பல்நோக்கு திட்டம். இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். இது தொடர்பாக டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவேன். அப்போது அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு பற்றியும், இந்த திட்டத்தின் உண்மை நிலையையும் எடுத்து கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.