சென்னை
தங்கள் கட்சி கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக – காங்கிரஸ் மற்றும் உள்ள கட்சிகள் ஒரு அணியிலும், அதிமுக – பாஜக மற்றும் உள்ள கட்சிகள் மற்றொரு அணியிலும் இணைந்து களம் இறங்குகின்றன. இந்நிலையில் 3 ஆம் அணியாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ ஜே கே ஆகிய கட்சிகள் இணந்துள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன், சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது இந்த கூட்டணி மக்களுக்காகவும் மாற்றத்துக்காகவும் உண்டானது எனவும் கூட்டணியின் பெயர் முதல் கூட்டணி எனவும் தகவல் அளிக்கபடுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், “நான் மு க ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்தால் அதற்கும் செய்தியாளர்கள் குறை கூறுகின்றனர். நான் விமர்சிக்காவிட்டாலும் குறை கூறுகிறீர்கள். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் நாங்கள் அரவணைப்போம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.