டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் செயற்குழு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்  இன்று காலை தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்து.

 

‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரன் ஒரு சுற்றுலா ஸ்தலமாகும். பயங்கரவாத தாக்குதல் காரணமாக பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த அந்த பகுதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எடுத்த பல்வேறு முயற்சியின் எதிரொலியாக, மீண்டும் பழைய பொலிவை எட்டியது. இந்த பகுதி பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படுவதுடன், அங்கு  கால்நடையாகவும் அல்லது குதிரைவாலி வழியாகவும் மட்டுமே செல்ல முடியும்,  இதனால்,  அங்கு உலகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத்தொடங்கினர். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கும் வருமானம் கிடைத்தது.

இந்த நிலையில், அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22-4-25) காலை சுற்றுலாப் பயணிகள் குழு சென்று, இயற்கை வளங்களை ரசித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த   பயங்கரவாத கும்பல் சுற்றுலா பயணிகள் மீது  தாக்குதல் நடந்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், இந்த தாக்குதலை நடத்தியது தடைசெய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாj  அமைப்பின் இந்த திடீர் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்திய அரசும், பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவத்தை கட்டவிழ்த்து உள்ளது.

இந்த நிலையில், இன்று  காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அவசர குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று கூறியது.

இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கார்கே, கவுரவ தலைவர் சோனியா, முன்னாள் தலைவரும், மக்களவை கட்சி தலைவருமான ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால்,  பிரியங்காகாந்தி  மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.