https://www.instagram.com/p/B_HZoYXF_4A/
கங்கணா, ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள்.சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர்கள் இருவரும் .
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல் இல்லாமல் மீண்டும் நேரடியாக பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என்று கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கிப் பதிவிட்டதாக ரங்கோலியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. பலரும் அளித்த புகாரின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் ஜனநாயகத்தில் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அதே நேரத்தில் ரங்கோலி முஸ்லிம் விசுவாசிகளின் இனப்படுகொலையை எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் இதுபோன்ற சமூக ஊடக தளங்கள்அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா “தங்கள் தளங்களைத் சொந்தமாக தொடங்க வேண்டும்” என்றும் கங்கனா பரிந்துரைத்தார்.