Skip to content
  • Wed. Jul 1st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எங்களுக்கு ‘டார்ச் லைட்’டேதான் வேணும்! தேர்தல்ஆணையத்தில் கமல்ஹாசன் கட்சி முறையீடு….

Dec 17, 2020

சென்னை: சட்டமன்ற தேர்தலில், தங்களது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்தான் வேண்டும் என கமல்ஹாசன் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதவாக்கில்  சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் , தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள , அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தது. ஆனால், அந்த சின்னம், முதலில் கேட்ட எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில், புதுச்சேரியில் கமல்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள கமலஹாசன், தங்களது கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்தான் வேணும் என அடம்பிடித்து வருகிறார். எங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ள பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.

இந்த நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தமிழகத்திலும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை  ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி முறையீடு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]

Post navigation

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் 21ந்தேதி ஆர்ப்பாட்டம்! ;ஸ்டாலின்
ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 4நாள் நடந்த ஐடி சோதனையில் சிக்கிய ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள்…

Related Post

இந்தியா தமிழ் நாடு

ஜூன் பருவமழை: கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஜூன் மாத மழைப்பொழிவு!

தமிழ் நாடு

28 பள்ளிகள் வெறிச்சோடியது; மாணவர் சேர்க்கை பூஜ்யமானது ஏன் ? கல்வித்துறை ஆய்வு

தமிழ் நாடு

மதம் மாறியவர் வெறும் முஸ்லிம் மட்டுமே… பிற்பட்ட வகுப்பு முஸ்லீம் கிடையாது : ஐகோர்ட் தீர்ப்பு

உலகம்

உலகம்

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கியர் ஸ்டார்மர்

June 22, 2026 Sundar
உலகம்

அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்: மேற்காசிய அரசியலில் புதிய திருப்பம்?

June 18, 2026 Sundar
உலகம்

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம்: கச்சா எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலையை நோக்கிச் சரிவு

June 18, 2026 Sundar
உலகம்

நார்வே பட்டத்து இளவரசிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

June 17, 2026 Sundar
இந்தியா உலகம்

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு : டிரம்ப்

June 13, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer