புனே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முக்கியமான தருணங்களில் செய்த தவறுதான், தோல்விக்கு காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ.
நேற்றையப் போட்டியில், பேர்ஸ்டோ 94 ரன்களை குறைந்த பந்துகளில் அடித்து மிரட்டினார். ஆனால், இவர் ஆட்டமிழந்ததும் நிலைமை அப்படியே மாறிவிட்டது.
அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 4 ஆண்டுகளாக, எங்களின் ஆட்டத்திட்டம் சிறப்பாக இருந்தது என்று நம்புகிறேன். அதுதான், தற்போது ஒருநாள் போட்டியில், நாங்கள் நின்றுகொண்டிருக்கும் நிலைக்கு அழைத்து வந்துள்ளது.
ஆனால், நேற்றையப் போட்டியில், நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். முக்கியமான தருணங்களைப் பயன்படுத்த தவறினோம். இத்தகைய தவறுகள், எதிர்வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் எங்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம். எனவே, அவற்றை களைந்தாக வேண்டும்.
ஆனால், அந்த தவறுகள் எங்களை மீண்டும் சோதிக்கின்றன. நாங்கள் மீண்டும் மேலெழுவோம். எனது ஃபார்ம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, டி-20 போட்டிகளில் நான் நிறைவாக உணர்கிறேன்” என்று பேசியுள்ளார் பேர்ஸ்டோ.