நமக்கு தெரிஞ்சு..

நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

நமக்கு தெரிஞ்சு..

ளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த வழக்கில் கிடைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு , பல மாநில ஆளுநர்களுக்கு, இனி வரப்போகும் ஆளுநர்களுக்கு தக்க பாடமாக இருக்கும்.. இந்த சட்டப் போராட்டத்தை பாராட்டியே தீர வேண்டும்

ஆளுநரின் அறிவாற்றல் அதைவிட ஆணவப் போக்கு எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை ஆழ்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும். ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தாலே அதன் தலையெழுத்தே தொலைந்தது என்று நினைத்திருக்கிறார். நிறுத்தி வைத்தல் என்பது, ஒரு தற்காலிகமான செயல். அவ்வளவுதான்.

ஒரு வழக்கில் ‘தண்டனை நிறுத்தி வைப்பு’ என்றால் அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று அர்த்தம்.

கொஞ்சம் அறிவு இருந்தாலே இந்த வித்தியாசம் தெரியும். புரியாமல் ஆடியதால்தான் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி அடித்து இருக்கிறது.

இந்த நேரத்தில் சில விஷயங்களை நினைவுபடுத்தி பார்க்க தோணுகிறது.

நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஆளுநருக்கு பதிலாய் தன்னை பல்கலைக்கழக வேந்தராக அறிவித்துக் கொண்டவர் ஆந்திர முதலமைச்சர் என்டி ராமராவ்..

1985- ல் தெலுங்கு பல்கலைக்கழகத் தொடங்கியபோது இந்த தடாலடியை செய்தார் என்.டி.ஆர். “கவர்னருக்கு பதிலாக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் வேந்தர் என்றால் பல்கலைக்கழக மானிய குழு UGC அங்கீகாரம் தராது, 54 சதவீத மானியங்களை நிறுத்தும்”என்று அப்போது கடுமையாக எதிர்த்தவர் சென்னா ரெட்டி.

1990 – ல்தான் தெலுங்கு பல்கலைக் கழகத்துக்கு UGC அங்கீகாரம் தந்தது என்பது தனிக்கதை.

இதே சென்னா ரெட்டி 1993 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.அப்போது ஜெயலலிதா ஆட்சி.. ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பயங்கரமான பரிமாணங்களைக் கண்டது. மோதலின் போது எந்தெந்த விஷயங் களிலோ எல்லை மீறி எகிறி அடித்த ஜெயலலிதா, பல்கலைக்கழகங் களில் இருந்தும் சென்னாரெட்டியின் பல்லை பிடுங்க முயற்சித்தார்.

வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்க சட்ட மசோதாக்களையே கொண்டு வந்தார். ஆனால் ஜனவரி 1994 ல் நிறைவேற்றப்பட்ட சட்டசபை தீர்மானங்களுக்கு சின்னா ரெட்டி ஒப்புதல் தந்து விடுவாரா என்ன?

இந்த விஷயத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் கடுமையாக ஜெயலலிதா நடவடிக்கைகளை எதிர்த்தன.. மறுபடியும் ஜெயலலிதா பாய்ந்தது 2013-ல் தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக வேந்தர் பதவி விவகாரத்தில்.. ( வீடியோ விவரம் 2023ல் ஸ்டாலின் )

எங்கோ தொடங்கிய போராட்டத்தில் இப்படியெல்லாம் கடந்து ஆளுநர் அதிகாரத்தை பறித்து உச்ச நீதிமன்றமே மசோதாவுக்கு ஒப்புதல் அளவு அளிக்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது தமிழக அரசு.