சென்னை:

ப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது குறித்து வீடியோவை வெளியிட்ட டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல், தங்களிடம்  மேலும் பல வீடியோக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிடிவிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர் ஜெ. சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதற்கு அரசியல் கட்சியினர்  பலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இது விதி மீறல் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை ஜெ. சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல், தங்களிடம் மேலும் பல வீடியோக்கள் உள்ளது என்றும்,  மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை எங்கு அழைத்து செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசனை செய்த வீடியோவும் உள்ளது என்று அதிரடியாக கூறினார்.

மேலும், இந்த வீடியோ வெளியானதற்கும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும், . தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை. வீடியோவை வெளியிட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

‘ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு தெரியும். வீடியோ குறித்த முழுவிவரத்தை எங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கு தெரிவிப்போம்.  ஜெய லலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை நாங்கள் விட மாட்டோம் என்று கூறிய வெற்றிவேல், இதுபோல தங்களிடம் மேலும் பல வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும்,  தேவைப்படும்போது அவற்றை வெளியிடுவோம் என்றும் கூறினார்.