சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேற்று ஈடுபட்ட திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
“திராவிட இயக்கம் மக்களுக்காக உழைத்த இயக்கம். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதற்காக அனைவரும் பாடுபடவேண்டும் . நல்லாட்சி அமைய ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி நிச்சயமாக மாற்றம் வரும்.
2001ல் அ.தி.மு.க. ஆட்சி வந்தபோது, அரசியல் பழிவாங்கும் படலம் நடந்தது. என்னை கைது செய்து எந்த அளவுக்கு கொடுமை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு கொடுமை செய்தார்கள. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம். பழிவாங்கும் எண்ணம் எனக்கு கிடையாது, தெரியாது. எனக்கு அண்ணா அவர்கள் இதனை கற்று தரவில்லை.
சுயநலம் கடந்து வந்தது தான் தி.மு.கழகம். இந்த இயக்கத்திற்கு வெற்றியை தர வேண்டியது. மக்களின் கடமையாகும். மக்களின் தன்மானம், சுய மரியாதையை காப்பாற்ற குரல் கொடுக்கின்றோம். இந்த போராட்டத்தில் உறுதியாக வெற்றி பெறுவோம். மனிதநேயத்தை காப்பாற்ற மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்” என்று கருணாநிதி பேசினார்.
Patrikai.com official YouTube Channel
