கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.
மே 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய  அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அடுத்ததாக  அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். (இந்தத் தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.)
பெரம்பூரில் 33 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.82 கோடி பேர். இவர்களில ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.93 பேரும் உள்ளனர்.  திருநங்கைகள் 4,720 பேர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.02 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டையில் 1.85 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்கள்,  21.05 லட்சம் பேர்.
இவர்கள் வாக்களிக்க, 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட  இருக்கின்றன. கூடுதலாக 10 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,961 வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 1,233 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4.75 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.
.பாதுகாப்புக்காக சுமார் 30,000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.