சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து,  அமைச்சரவையில்  இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தவெகவுக்கு நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை திருமாளவளன் தெரிவித்துள்ளார்.

விசிக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தவெக அமைச்சரவையில்  அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்துக் கொண்டிருந்த அதிமுக அதிருப்தியினருக்கு அமைச்சரவை பதவி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், எந்த ஒரு அணிக்கும் அருதி பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் ஒரு தனிப் பெரும் கட்சி என்ற வகையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிக,  முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைதுள்ளது. இதற்கிடையில்  அதிமுகவின் ஒரு குழுவையும், குதிரை பேரம் நடத்தி தனது வசப்படுத்தி உள்ளது. இதனால், தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றது.

இந்த நிலையில், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்க தவெக முன்வந்துள்ளது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஒத்துக்கொள்ளாத நிலையில், விசிக, கம்யூனிஸ்டு கட்சிகளை சந்தித்து அமைச்சர் ஆதவ்அர்ஜுனா  பேசி வருகிறார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா,  தமிழக அரசியல் சூழல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா,  இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமூக நீதிக் கொள்கையைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுகிறது.

அதேநேரம், வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற இடதுசாரி (கம்யூனிஸ்டு) கட்சிகளின் கொள்கை முடிவை நாங்க மதிக்கிறோம். எனினும், கூட்டணியில் உள்ள விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இந்த அமைச்சரவையில் நேரடியாக இடம்பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அதிமுக குறித்து  பேசியவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்பட முயன்றதால் தான், அ.தி.மு.க.வின் ஒரு பகுதியினர் (எம்.எல்.ஏக்கள்) எங்களுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்தனர்.
தி.மு.க.வுடன் இணைவது என்பது வரலாற்றுப் பிழை என்றும், அது தற்கொலைக்குச் சமம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நாங்கள் எப்போதும் தோழமையுடன்தான் பார்க்கிறோம் என்றார்.

தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையே குதிரை பேர அரசியல் நடந்ததாகக் குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் ஒரு குதிரை பேர அரசியலைத் தொடங்கினார்கள்.

தனது சுய கொள்கையையே மறந்து, எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க திமுக தீவிரமாக முயற்சி செய்தது என்று செய்தியாளர்கள்தெரிவித்தார்.

அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள சூழலில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள இந்த அழைப்பும், எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனமும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  விசிக  தலைவர் திருமாவளவன் விளக்கம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன். கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் கூறினார். விசிக 2 இடங்களை பெற்றிருக்கிற நிலையில் தவெகவுக்கு நிபந்தனை ஆதரவை வழங்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் அமைச்சரவையில் அதிமுக அணி இடம்பெறாது என தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக[வம்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 மேலும் கம்யூனிஸ்டு மற்றும் விசிகவிங்ன கடும் எதிர்ப்பு  காரணமாக,  விஜய் அமைச்சரவையில் இடம்பெற துடித்துக் கொண்டிருந்த அதிமுகவின் ஒரு குழுவைச் சேர்ந்த,  வேலுமணி, சண்முகம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]