சென்னை: நடப்பு கல்வியாண்டில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, முதலில் விளையாட்டு பிரிவுக்கு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான (TNEA) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஜூன் 2-ஆம் தேதி வரை TNEA அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிக்கப்பட்டுள்ளது.
இணையவழி ஆவணச் சரிபார்ப்பு ஜூன் 8, 2026 அன்று தொடங்கி, ஜூன் 20 வரை நடைபெறும். தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் (10 மற்றும் 11-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், 12-ஆம் வகுப்பு பதிவு எண்/மதிப்பெண் பட்டியல், சாதி/வருமானச் சான்றிதழ்கள் மற்றும் தேவைப்படின் நன்னடத்தைச் சான்றிதழ்) ஜூன் 6-க்குள் இணையதளத்தின் வாயிலாகப் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்யவும்.‘
இதன் ஒரு பகுதியாக, விளையாட்டுப் பிரிவு (Sports Quota) இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.