லண்டன்: கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறிய நிலையில் தொடர்ந்து வருவதால், மக்கள் வைரசுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹானிலிருந்து பரவி பெருந்தொற்றான  கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது.  அவ்வப்போது இடம் பொருள், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு மக்களை பலிகொண்டு வருகிறது. உருமாறிய வகையில், அதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா  என பல பெயர்களில் பரவியதுடன் சமீப காலமாக டெல்டா வைரஸ் மேலும் உருமாறி டெல்லி பிளஸ் என்ற பெயரில் பரவி வருகிறது. நாடு முழுவதும் அடு வர இருக்கும் கொரோனாவின் 3வது அலை டெல்லி பிளஸ்-ஆக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

 இங்கிலாந்தின் வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட 86 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர், 63.4 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறார்கள்.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் இடைக்கால ஆலோசனையைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க பிரிட்டிஷ் அரசு தயாராகி வருகிறது. இறுதி ஆலோசனை வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில், இதுவரை 49,03,434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்,  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து வருகிறது.  ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மக்கள் விருப்பம் இருந்தால் முக கவசங்களை அணிந்து செல்லுங்கள் என்று கூறி உள்ளது. அரசின் முடிவுக்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்றுநோய் இங்கிலாந்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றவர், வரும் வாரங்களில் பாதிப்புகள்  தொடர்ந்து உயரும்  வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள்  இந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் கொரோனா அபாயங்களை கவனமாக நிர்வகித்து, நம் வாழ்க்கையைப்  நடத்த பழகி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.