அமெரிக்கா – கனடா ஆகிய இருநாட்டு எல்லை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

அத்தியாவசிய தேவை தவிர வேறு யாரையும் இதுவரை அனுமதிக்கவில்லை, இந்நிலையில், இந்த எல்லையை திறக்க கனடா அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய கனடா நாட்டு சுகாதார அமைச்சர், முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா பரிசோதனையில் எதிர்மறையான கனடா நாட்டைச் சேர்ந்த குடிமக்களுக்கு மட்டும் எல்லையை திறந்துவிட ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதனால், அமெரிக்கா – கனடா எல்லையை கடக்க ஏராளமானோர் காத்திருக்கின்றனர், இன்று திங்கட்கிழமை இந்த எல்லையை திறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கூறிவரும் இவர்களுக்கு சாதகமான எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை கனடா அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.