சென்னை,

ற்போது அதிமுக அம்மா அணியில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

ஆனால், எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு எங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று புரட்சிதலைவி அம்மா அணி தலைவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தை தொடர்ந்து அதிமுக அம்மா அணியில் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு அணியினருமான பிரிந்தனர்.

ஏற்கனவே இரண்டாக பிரிந்த அதிமுக, தற்போது 3 ஆக உடைந்துள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனுக்கு தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றனது. இதுவைரை 31 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆட்சி செய்துவரும் எடப்பாடிக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எடப்பாடி ஆட்சிக்கு எங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என கூறினார்.