சென்னை: நீட் தேர்வைகோண்டு அரசியல் செய்து வரும் திமுகவைச் சேர்ந்த சபாநாயகர், தற்போது, நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரி இல்லை என கூறியிருப்பதுடன், அதற்காக புது விளக்கம் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அவரது விளக்கம் என்னவென்றால், நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லையாம், அதனால்தான் அதை எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என அறிவித்த ஸ்டாலின் இன்று வரை அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் உள்ளார். இதற்கிடையில் அவரது மகனும், துணைமுதல்வருமான உதயநிதியும், ’நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, 50 நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை, பள்ளி கல்லூரிகளுக்குள்யே சென்று வற்புறுத்தி கையெழுத்து பெற்று, அதை குடியரசு தலைவருக்கம், உச்சநீதிமன்றத்துக்கும் அனுப்பினார். ஆனால், உச்சநீதிமன்றதை அதை கண்டுகொள்ளாத நிலையில், நீட் தேர்வு தொடரும் என கூறிவிட்டது. இதனால், நீட் அரசியல் எடுபட முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அப்பாவு, “இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. ஆண்டுக்கு, 11,500 பேர் பி.டி.எஸ், எம்.பி.பி.எஸ் படிப்பை படிக்கிறார்கள். 10,000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது என்றவர்,
நீட் தேர்விற்கு நாங்கள் எதிரி இல்லை. ஆனால், அது எப்படி நடக்கிறது, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அது ஒரு தனியார் அமைப்பு. தனியார் அமைப்பிடம் நீட் தேர்வை கொடுத்திருக்கிறார்கள். நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மை இல்லாததைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றவர், மக்களுக்கு விரோதமான திட்டங்கள் கொண்டு வந்தால் நாங்கள் அதை எதிர்ப்போம் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நீட் தேர்வு நடத்துவதை ரோட்டரியிடம் கொடுத்திருந்தால் கூட தன்னலம் இல்லாமல் அந்த தேர்வை 100% நேர்மையாக நடத்தியிருப்பார்கள். என்றவர், பொதுத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அரசு நடத்துவதற்கும், தனியாரிடம் நடத்துங்கள் என சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.
தேசிய தேர்வுமுகமை என்பது மத்தியஅரசை சார்ந்த ஒரு அமைப்பு. அதுதான் நீட் தேர்வு உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்துகிறது. இதை சபாநாகர் அப்பாவு தனியார் நிறுவனம் என்று கூறுகிறார். அப்படியென்றால், தமிழ்நாட்டில், ஏராளமான அரசு பணிகள் தனியார் மூலம்தானே நடத்தப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கழக பணியாளர்கள் நியமனம் தனியார் நிறுவனம் மூலம் ஆள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல பேராசிரியர் பணியிடங்களும் நிரப்ப முயற்சித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.