சுர்ஜித்தை மீட்பதில் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மீட்பு பணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “ரிக் இயந்திரத்தால் இங்குள்ள பாறைகளை உடைக்க முடியவில்லை. 40 அடிக்கு மேல் இயந்திரத்தால் தாண்ட முடியவில்லை. இவ்வளவு கடினமான பாறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இயந்திரங்களே திணறும் அளவுக்கு பாறைகள் இருக்கின்றன. தோண்ட தோண்ட பாறைகள் தான் இருக்கின்றன. அதுவே சவாலாக தான் இருக்கிறது. டிரில் பிட் பற்கல் இந்த பாறைகளால் உடைந்துவிடுகின்றன. அதனால் இயந்திரத்தால் திட்டமிட்ட படி குழி தோண்ட முடியுமா என்பதே கேள்விக்குறி தான். குழந்தையிடமிருந்து எந்த குரலும், ஓசையும், அசைவும் இல்லை.

தற்போது இங்குள்ள பாறைகளை உடைப்பது என்பது கடினமான பணியாக இருக்கிறது. மீட்புப்பணியில் கடினமான பாறைகளை உடைக்க ரிக் இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் ட்ரில்லிங் பிளேடு சென்னையில் இருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்தடையும். அதை வைத்தும் முயற்சித்து பார்க்க உள்ளோம். அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சுர்ஜித் விழுந்து 4 நாட்கள் ஆனதால் மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருகிறோம். பெற்றோரிடம் இது தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரிகளுடன் பேசி மாற்று வழி குறித்து முடிவெடுக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]