நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பதாகைகளை ஏந்திய மாடுபிடி வீரர்கள்

Must read

மதுரை: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன.

அதனை தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு மாடு பிடி வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதனால் ஜல்லிக்கட்டு களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article