சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி ஒளியை பரவச் செய்ய உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். சமூக நீதிக் காவலர் விபி சிங்கின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்: “கல்வி – வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த
‘சமூகநீதிக் காவலர் விபி சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Patrikai.com official YouTube Channel