பெங்களூர்:

பெங்களூர் – சென்னை வழித்தடத்தில் மீண்டும் விமான சேவையை  ஏர் ஆசியா விமான நிறுவனம் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே விமான சேவை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவையை நிறுத்தியது ஏர் ஆசியா. தற்பேது இந்த வழித்தடத்தில் மீண்டும் விமான சேவையினை தொடங்கி உள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூர் சென்னை இடையே தனது முதல் விமானத்தை இயக்கியது. ஒரு நாளைக்க 5 தடவை இந்த வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.‘

மேலும் இந்த 5 விமான சேவையானது, காலை 3 முறை, மதியம் 1 முறை, மாலை 1 முறை என 5 முறை இயக்கப்படும் என்றும்,  சென்னையில் இருந்து புபனேஸ்வருக்கு 1 நேரடி விமானத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதை  ஏர்ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது டுவிட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார்.

தற்போது ஏர் ஆசியா நிறுவனம்,  பெங்களூருவில் இருந்து டில்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுஹாத்தி, இம்பால், விஷாகபட்டினம், ஐதராபாத், ஸ்ரீநகர், பாக்தோகிரா, ராஞ்சி மற்றும் புபனேஸ்வர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.