கொல்கத்தா

ர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில்  ராமர் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்ட தினம்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அவ்வரிசையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,

‘இது தேசவிரோதம். நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். இது ஒரு ஆபத்தான கருத்து. இதை நிச்சயம் திரும்பப்பெற வேண்டும். இது வரலாற்றை திரிக்கும் முயற்சி. நமது சுதந்திரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’

என்று கூறியுள்ளர்.