வயநாடு: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியானது, பண்டைய காவியமான இராமாயணத்துடன் நெருங்கியத் தொடர்புடையது என்று தெரியவருகிறது.

பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு பகுதி, இந்தியாவில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறதா? என்று அடையாளம் காண்பதே கடினமாக உள்ளது என பேசியிருந்தார்.

வேட்புமனு தாக்கலின்போது, ராகுலின் பேரணியில் பறந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொடிகளை வைத்து அவர் இதை தெரிவித்தார்.

ஆனால், வயநாடு பகுதியில் 12 பிரிவுகளாக வாழும் 18% க்கும் அதிகமான பழங்குடி மக்கள், இராமாயண காப்பியத்தை வாய்வழி விளக்கக் கதைகளின் வடிவில் பல தலைமுறைகளாக பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த மக்கள், தங்களுடைய நில அமைவுகளையும், பயிர்களையும்கூட அக்காப்பியத்துடன் இணைத்து வாழ்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

வயநாட்டில் அமைந்த பெரிய குன்று ஒன்றின் பெயர் பனசுரா மலை. இது இராமாயணத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் என்பதையும் நினைவில் வைக்க வேண்டியுள்ளது.

– மதுரை மாயாண்டி