ஐதராபாத்:

தேர்தல் முடிந்த தெலங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 11- ம் தேதி வாக்குப்பதி நடந்தது.  இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு ஜக்தியால் தாசில்தார் அலுவலகத்திலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

தேர்தல் முடிந்தபிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்படுவதை படம்பிடித்த பத்திரிக்கையாளர்கள், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆட்டோவில் எடுத்துச் சென்றது வாக்குப் பதிவான இயந்திரங்கள் இல்லை என்றும், தேர்தல் ஊழியர்களின் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது வேறு வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தவறான செய்தி யை வெளியிட்டதாக 9 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தெலங்கானா பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டன் தெரிவித்துள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கல்வகுண்டல கவிதா போட்டியிடும் நிஜாமாபாத் மக்களவை தொகுதிக்குள் ஜக்தியால் வருவது குறிப்பிடத்தக்கது.