நெட்டிசன்:
பி.ஜே. பிரான்சிஸ் (P.J. Francis1 hr )  அவர்களின் முகநூல் பதிவு:

90% பொய்களால் புனையப்படும் Whatsapp மற்றும் ஃபேஸ்புக்.
SP ஆஃபீசில் கடிதம் கொடுத்து திருமண செலவுகளுக்கு 5 லட்சம் பெறலாம் – பொய்
குஜராத் தொழிலதிபர் 6000 கோடி வரி கட்டினார் அவரே மோடிக்கு கோட் கொடுத்தவர் – பொய்
ஜனகனமன உலகின் சிறந்த தேசிய கீதம் – பொய்
104 ஃபோன் பண்ணா இந்தியால எங்கே இருந்தாலும் இரத்தம் கிடைக்கும். யோவ் அது மகாராஸ்ட்ரா மாநில அரசு திட்டம்
இதை 5 குரூப்க்கு ஃபார்வர்டு செய்தல் சைக்கிள் நகரும். போய் பொம்மை விளையாடுயா நீ.
மோடி அறிமுகப்படுத்துற புது திட்டம். அதை ஏண்டா அதை Social mediaல அறிமுகப்படுத்தறார்.
இந்த பெண் நாக்பூர் ரயில்வே ஸ்டேசனில் கண்டு பிடிக்கப்பட்டாள். போய் கண்டுபிடி அவங்க பெற்றோரை. இல்ல ஷேர் செய்யாத.
அவசர இரத்தம் தேவை. அணுகவும். முதலில் நீங்கள் அணுகுங்கள். இல்லன்னா சும்மா இருங்கள்.
விக்ஸ் ஏக்சன் 500 மற்றும் 25 பொருட்கள் மத்திய அரசால் தடை – பொய்
ரூபா நோட்ல சேட்டிலைட் இருக்கு – பொய்
மாஸா குளிர் பானங்களில் aids Blood கலந்தது. அப்ப நீங்க மொத குடிங்க
சக்திவாய்ந்த கதிர்கள் இன்று இரவு பூமிக்கு மிக அருகில் வருவது.. அருமையான பதிவு
பம்பாய்ல செல்போன் வெடிச்சு நைஞ்சு போன பையன் ஃபோட்டோ
பூச்சியை தொட்டா ஓட்டை ஓட்டையா கை மாறின போட்டோ. அய்யோ மிடில.
Whatsapp gold வந்து விட்டது. வந்தா நீங்களே வெச்சுக்கங்க.
அமேசான்/ ஃப்ளிப்கார்ட் ஆஃபர். சத்தியமா எனக்கு வேணாம்.
5வருசமா கரூர் பஸ்ல தொலைந்த சான்றிதழ். 50 வருசமா ஃபார்வர்டு பண்ணுங்க. ஆனா இந்த குரூப்ல வேணாம்
3 குரூப் ஃபார்வர்டு செஞ்சா கட்டத்துல இருக்கற கலர் கீழே வந்து உக்காரும். நீங்களே வேணா கூட வந்து ஒக்காருங்க. ஆனா எங்களை விட்டுடுங்க.
எந்த செய்தியும் நாளிதழில் மற்றும் டிவி செய்தியில் வராமல் எதையுமே நம்பாதீர்கள்.
அத்தகைய செய்திகளை உடனே அழித்து விடவும்.
ஷேர் செய்து மற்றவர்கள் நேரத்தை விரயமாக்க வேண்டாம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இது நாட்டுக்கு ஏன் உங்களுக்கே செய்யும் துரோகம்