ஏப்ரல் 11 மற்றும் 13 ம் தேதி  மிராஜ்ஜிலிருந்து லட்டூர் வரை இயங்கிய இரண்டு தண்ணீர் ரயில்கள் 100  டேங்கர்களை (வேகன்) இழுக்கக்கூடிய நிலையில் வெறும் 10 வேகன்கள் மட்டுமே இழுத்தன. மற்றொரு வகையில், ரயில்கள்  54 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்திருக்க வேண்டிய இரண்டு ரயில்களும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டு வந்தன.
 
water-train-wagon
மிராஜ் நிலையம் அருகேயுள்ள மத்திய ரயில்வேயின் வடிகட்டும் ஆலையிலிருந்து மிராஜ் நிலையம் மார்ஷலிங்கை யார்ட் வரையிலான 2.7 கி.மீ. நீர் குழாய் திட்டத்தின் மெதுவான முன்னேற்றம் தான் ரயில்வேயை வெட்டிக்குறைக்கப்பட்ட நீர் யாளர்களுக்கு அனுப்ப கட்டாயப்படுத்துகின்றது.

water train reaches 1
அ.தி.மு.க. பாணியில் ஸ்டிக்கர் பாய்ஸ் ஆன பா.ஜ.க.வினர்.

முற்றத்திலேயே ரேக்கில் நீர் நிரப்பப்பட வசதி செய்துக்கொடுக்கும் வகையில், தண்ணீர் வடிகட்டும் ஆலையிலிருந்து மிராஜ் மார்ஷலிங்க் யார்ட்-ன்  6வது வரிசை வரை, அம்மாநிலம்  ஒரு குழாயைக் கட்டியிருக்க வேண்டும்.
இப்போது, மிராஜ் நிலையத்தின் 2வது மேடையில் வந்து நிற்கும் நீண்டதூர  ரயில்களுக்கு நிரப்பப்பட வேண்டிய நீரை ரயில்வே எடுத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ரயில்மூலம் தண்ணீர் சேவை என்பது உண்மையில் கண்ணீர் துடைப்பா அல்லது வெறும் கண் துடைப்பா என்பதே விவரமறிந்தவர்கள் எழுப்பும் வினா .