சேலம்
சேலம் நகரில் கடந்த 1920ஆம் ஆண்டு மகாத்மா காந்தி திறந்து வைத்த குடிநீர் குழாய் குறித்து நெட்டிசன் பதிவு
தமிழகத்துக்கும் மகாத்மா காந்திக்கும் இடையில் தொடர்புகள் நிறைய உண்டு என்பதைப் பலரும் அறிவார்கள். இதில் சேலம் நகருக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகளில் ஒன்றைப் பற்றி எவர்கிரின் சேலம் என்னும் முகநூல் பக்கத்தில் Esan D Ezhil Vizhiyan பதிந்துள்ள பதிவு இதோ
”மகாத்மா காந்தியடிகள் திறந்து வைத்த குடிநீர் குழாய்..!
1920 ஆம் ஆண்டில் சேலம் வருகை தந்த மகாத்மா காந்தியடிகள் சேலம் செவ்வாய்பேட்டையில் 21-8-1920 இல் திறந்து வைத்த தண்ணீர் குழாயின். கல்வெட்டு இது..!
காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் தற்போது கல்வெட்டு செவ்வாய்பேட்டை தேர்நிலையம் அருகிலும் ,குடிநீர் குழாய் சற்று தள்ளியும் உள்ளது..!
இதே போன்று சேலம் கிச்சிபாளையம் சின்னமாரியம்மன் கோவில் அருகிலும் மகாத்மா காந்தி ஒரு பொது குடிநீர் குழாயை திறந்து வைத்துள்ளார்..!
வரும் அக்டோபர் 2ந்தேதி அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில்,சேலத்தில் மகாத்மா காந்தி 1920 ஆம் ஆண்டு திறந்து வைத்த நூற்றாண்டை நெருங்கும் ,குடிநீர் குழாய்களை, அதற்குரிய கல்வெட்டுகளைப் புதுப்பித்து ,மின்விளக்கு அலங்காரங்கள் செய்து சிறப்பிக்க வேண்டுமாய் எவர்கிரீன் சேலம் முகநூல் குழு சார்பாக சேலம் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்..!”
எனப் பதிந்துள்ளார்.