சென்னை: வடமாவட்ங்களில் பெரும் சேதத்துக்கு காரணமான சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், பல கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுக்கு திமுக அரசும், அதிகாரி களும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், சாத்தூர் அணை நிரம்பிய நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை திறந்து விடப்பட்டது. இதனால், வட மாவட்டங்கள் பெரும் சேதங்களை எதிர்கொண்டன. தேசிய நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ள பல கிராமங்களும் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவுபோல காட்சி அளிக்கறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை திறக்கப்பட்டது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பும் இன்று திறக்கப்பட்டால் சென்னை பேரழிவை சந்தித்தது. அதுபோல தற்போது சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டதால், விழுப்புரம், திண்டிவனம், கடலுர், கள்ளக்குறிச்சி உள்பட பல வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று (டிச.1) காலை 6 மணிக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் இன்று (டிச.2) அதிகாலை 2.45 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்தது.
அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப் பட்டது. இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. நீர்வரத்து குறைந்ததால், ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என அறிவித்துவிட்டு, நள்ளிரவில் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கரையோரங்களில் வசித்த 4 மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை விடுத்தது. இதில், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படலாம் என உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து, முன்கூட்டியே அந்த பகுதி மக்கள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்குமுன்கூட்டியே எந்தவொரும் தகவலும் தெரிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து காலையில்தான் தகவல்கள் வெளியிடப்பட்டது. அதற்கு அணையில் இருந்து வெளியேறிய சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீரால் பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டன. எதிர்பாராத திடீர் வெள்ளத்தால், 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர்.
உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
திருவண்ணாமலை – விழுப்புரம், திருக்கோவிலூர் – விழுப்புரம், விழுப்புரம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.
கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திறந்துவிட்டு, சென்னையை மூழ்கடித்ததை நினைவு கூறுவது போன்று, 9 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக அரசும், அதிமுக அரசு போல எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நள்ளிரவில் 1 லட்சம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்படும் என முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, 4 மாவட்ட மக்களை நீர்வளத் துறையினர் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி அணை, வாணியாறு அணை, பாம்பாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி 1.68 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்றியதாக நீர்வளத் துறையினர் கூறுகின்றனர்
இதனிடையே, சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையிருந்து, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.