சென்னை:

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் தண்ணீர் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சுற்றி உள்ள ஏரிகள் தண்ணீரின்றி காய்ந்துபோனதால், சென்னையில் தண்ணீர் தட்டப்பாட்டு தலைவிரித்து ஆடுகிறது.  வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் தண்ணீருக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அனகாபுத்தூர் அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சபாநாயகர் தனபாலின் டிரைவர் ஆதிமூலராமகிருஷ்ணன் அங்கு வசித்த வந்த  சுபாஷினி என்ற பெண்ணை  கத்தியால் தாக்கியுள்ளார். இது அந்த பெண் படுகாயமடைந்தார். இதுகுறித்து புகார் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து   சபாநாயகரின் ஓட்டுனரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை காரணமாக  சில ஐ.டி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.