காரைக்கால்:

நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில், பிரபலமான திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் குளத்தில் குளிப்பவர்கள், குளத்திலேயே துணிகளை விட்டுச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதி புகழ்மிக்க. சனி தோஷம் உள்ளவர்கள்  நாடு முழுவதும் இருந்து இங்கு வந்து நீராடி சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.

அப்போது, அங்குள்ள நளன்  தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, தாங்கள் உடுத்தி வந்த ஆடைகளை குளத்திலேயே விட்டுச்செல்வது ஐதிகம். தற்போது பக்தர்கள் நெருக்கம் அதிகரித்து வருவதால், அவர்கள் விட்டுச்செல்லும் துணிகளால் சுகாதாரச்சீர் கேடு மட்டுமின்றி தண்ணீரும் அசுத்தமாகி வருகிறது. இந்த நிலையில், குளத்தின் நீர் அடிக்கடி மாற்றும் சூழல் ஏற்படுகிறது

தற்போது தண்ணீர் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் தங்கள் உடைகளை குளத்தில் விட்டுச் செல்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல், குளத்தின் புனிதத்தன்மையை காக்கவும், நிலத்தடி நீர் விரய மாவதை தடுக்கவும்   குளத்தில் ஆடைகளை கலைந்து விடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.