சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின்  நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுபோல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக,  மேட்டூர் அணை  கடந்த வாரம் 7வது முறையாக முழு கொள்அளவான 120 அடியை எட்டியுள்ளது.

தற்போதைய நிலையில்,  காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 65,000 கனஅடியாக  வந்துகொண்டிருக்கிறது. அதபோல மேட்டூர்   அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 42,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது. அணைக்​கான நீர்​வரத்து மேலும் அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தால், வெள்​ளக் கட்​டுப்​பாட்டு மையத்​தில் 24 மணி நேர​மும் நீரின் அளவை அதி​காரி​கள் கண்​காணித்​தும், தேவைக்​கேற்ப வெளி​யேற்​றி​யும் வரு​கின்​றனர்.

காவிரிக் கரையோர மக்​களுக்கு எச்சரிக்கை

அணையி​லிருந்து 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால் காவிரிக் கரையோர மக்​களுக்கு விடுக்​கப்​பட்​டுள்ள வெள்ள அபாய எச்​சரிக்கை நீட்​டிக்​கப்​பட்டுள்​ளது. மேலும், வரு​வாய், தீயணைப்​பு, நீர்​வளம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களைச் சேர்ந்த அதி​காரி​கள், காவிரிக் கரையோரப் பகு​தி​களில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

விநாடிக்கு 65,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், காவிரி ஆற்​றில் கட்​டப்​பட்​டுள்ள 7 கதவணை​களில் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யத்​தில் மட்​டுமே 250 மெகா​வாட் மின் உற்​பத்தி நடக்​கிறது என அதிகாரிகள் தகவல் தெரி​வித்​தனர்.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று காலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மாலை​யில் 50 ஆயிரம் கனஅடி​யாக​வும், இன்று காலை 4 மணி​யள​வில் 57 ஆயிரம் கனஅடி​யாக​வும், மதி​யம் 12 மணி​யள​வில் 65 ஆயிரம் கனஅடி​யாக​வும் படிப்​படி​யாக உயர்ந்​தது. வெள்​ளப்​பெருக்கு காரண​மாக ஒகேனக்​கல் ஆறு மற்​றும் அருவி​களில் குளிக்​க​வும், பரிசல் இயக்​க​வும் மாவட்ட நிர்​வாகம் அறி​வித்த தடை தொடர்​கிறது. காவிரிக் கரையோர பகு​தி​களை வரு​வாய், வனம் உள்​ளிட்ட துறை அலு​வலர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்​.

7வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – வைகை அணையும் நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி…