சென்னை:

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஜூன் 24 (திங்களன்று) காலை 9.30 மணியளவில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

குடிநீர் பஞ்சத்தைப் போக்க மாநில அரசு உடனே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க.,வின் சென்னை மாநகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.