ஏ.டி.எம்.மில். கார்டு போட்டால் ,பணம் கொட்டுவது வழக்கம்.
ஆனால் சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள ஏ.டி.எம்.மில் கார்டு போட்டால் சுத்தமான தண்ணீர் கொட்டுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்யும் ‘ஆல்ஃபா லாவல்’ என்ற சர்வதேச நிறுவனம் இந்த ஏ.டி.எம்.மை நிறுவி உள்ளது.
இந்த ஏ.டி.எம்.மில் கார்டு செருகினால், 20 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
20 லிட்டர் கேன் தண்ணீரின் விலை, 7 ரூபாய் மட்டுமே.
24 மணி நேரமும் பணம் எடுப்பது போல், இந்த ஏ.டி.எம்.மிலும் 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கலாம்.
‘’சென்னையின் புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் குடியிருப்பு வாசிகள் சிரமப்படுகிறார்கள். அவர்களை மனதில் வைத்து இந்த ‘குடிநீர் ஏ.டி.எம்.மை திறந்துள்ளோம்’’ என ‘ஆல்ஃபா லாவல் இந்தியா ’’ நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஏ.டி.எம்.மில் விநியோகம் செய்யும் குடிநீரை உற்பத்தி செய்ய காட்டாங்குளத்தூரில் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது.
ஆவடியிலும் இது போன்ற ஏ.டி.எம். விரைவில் திறக்கப்படும்.
-பா.பாரதி.