போலீசாரை வியக்க வைத்த ‘டாஸ்மாக்’ கொள்ளையர்கள்..

Must read

ஓசியில் ‘சரக்கு’ கிடைத்தால் பாட்டில் பாட்டிலாக வயிற்றில் நிரப்புவது குடிகாரர்களின் ‘பாலிஸி’.
ஆனால் கண் முன்னால் அலமாரிகளில் ஆயிரம், ஆயிரம் பாட்டில்கள் இருந்தும், நான்கே நான்கு பாட்டில்களை மட்டும் கையில் எடுத்துச்சென்ற, குடிமகன்களை கேள்வி பட்டதுண்டா?
பார்க்கலாம்.

மகாபலிபுரத்தில் உள்ள ’டாஸ்மாக்’ கடைக்கு கடந்த புதன்கிழமை அன்று நள்ளிவில் வந்த கொள்ளையர்கள், கடையின் ‘ஷட்டரை’ உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அவர்கள் நோக்கம், பாட்டில் அல்ல. பணம்.
கடை ஊழியர்கள், முன் ஜாக்கிரதையாக பணத்தை எடுத்து சென்று விட்டதால், கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடையில் காணும் இடமெல்லாம் பாட்டில் பாட்டிலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, நான்கே நான்கு பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.
தாங்கள் கடைக்கு, வந்ததை பதிவு செய்யும் விதமாக இந்த பாட்டில்களை அவர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.
-பா.பாரதி.

More articles

Latest article