டெல்லி,
நெருக்கடியான தருணங்களில் அமைச்சர்கள் தங்களது கார்களில் சிகப்பு சுழல்விளக்கைப் பயன்படுத்துவதில் தவறில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது கார்களில் சுழல் விளக்குகளை பயன்படுத்த உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யாநாத் தடைவிதித்துள்ளார்.
பஞ்சாப் மாநில அரசும் இதேபோல் ஒரு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் மத்தியநீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் மத்திய, மாநில அமைச்சர்கள் மிகமுக்கியமான கூட்டங்களுக்கு தாமதமாக சென்றால் அரசுக்கும் மக்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன.
அதனால் அமைச்சர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் தங்கள் கார்களில் சிகப்பு சுழல் விளக்கைப் பயன்படுத்தி விரைவாக செல்வது தவறில்லை என்று கூறினார். அவ்வாறு செய்தால்தான் விமானத்தையும் ரயிலையும் சரியான நேரத்தில் பிடித்து செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லமுடியும் என்று கூறிய உமாபாரதி, அதேநேரம் சுழல்விளக்கை அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.