மைசூரு:

ருவமழை காரணமாக கர்நாடகாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது.  இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ள நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டு மேற்கூரை மீது ‘ஹாயாக’ படுத்து கிடந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது 10 அடி முதலை ஒன்று. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடாகாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக  பெல்காம் மாவட்டத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இநத் நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள வீட்டின் மேற்கூரையில் மீது  பெரிய முதலை ஓன்று படுத்து கிடக்கும்  வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மழை வெள்ளத்துக்கு மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ரேபேக் பகுதியில் உள்ள வீட்டின் மீது முதலை ஒன்று ஹாயாக படுத்திருக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீரைக்கண்ட அச்சத்தால் அந்த முதலை வீட்டின் கூரை மீது ஏறியதா அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்படும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வீட்டின் கூரை மீது ஏறியதா என்பது அந்த முதலைக்கே தெரியும்…