இன்று மெகாலியில் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் ஐ.பி.எல். போட்டிகளில் தனது திறைமையை வெளிப்படுத்தியவர். குறிப்பாக  ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் புனே அணியின் வெற்றிக்கு மிகுந்த முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

 

அப்போதே இவர், இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு அடிபட்டது. அதன்படி இந்திய அணியில் சேர்க்கப்பட்ட சுந்தர் வாஷிங்டன், இன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் முதன் முதலாக களம் இறங்குகிறார்.