சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை விரட்டும், பெங்களூரு அணியின் துவக்க வீரராக, வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார். இது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்துவகை கிரிக்கெட்டிலுமே, ஆடும் தகுதியை குறுகிய காலத்தில் வளர்த்துக்கொண்ட வீரராக உருவாகியுள்ளார் சுந்தர். இந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ளார்.

மும்பைக்கு எதிராக 1 ஓவர் பந்துவீசிய சுந்தர், 7 ரன்கள் கொடுத்து, கிறிஸ் லின் என்ற முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது, கேப்டன் விராத் கோலியுடன் இண‍ைந்து, தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.

இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தினால், துவக்க வீரராக தொடர்ந்து, பெங்களூரு அணியின் சார்பில் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.