டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை! அரவிந்த் கெஜ்ரிவால்

Must read

டெல்லி: தலைநகர் டெல்லியில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியஅரசு கோரிக்கை வைத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஆக்சிஜன் பற்றாக்குறை என அலறிய டெல்லி முதல்வர் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை என கூறி வருகிறார். போர்க்கால நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

லகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு (2020) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஆக்சிஜன் தேவைய அதிகரித்தது. அதனால், ஆக்சிஜன் தேவைக்கான ஆலைகளை நிறுவன மத்தியஅரசு அனுமதி வழங்கியது. ஆனால், அதில் ஆர்வம் காட்டாத கெஜ்ரிவால் அரசு, மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுவதிலேயே காலத்தை கடத்தியது. அதன்பாதிப்பு, சமீப காலமாக எதிரொலித்தது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஏராளமான உயிர்களும் பலியாகின். ஐஏஎஸ்அதிகாரியான முதல்வர் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தேவையை கருத்தில்கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததே, தலைநகரில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.

அங்கு ஓரளவு ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்ந்து வரும் நிலையில்,  தற்போது தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என குரல் எழுப்பி உள்ளார்.  டெல்லியில் 3 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது. எனவே  தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

விளம்பரத்திற்காக ரூ. 822 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு பைசாகூட செலவிடவில்லை! அஜய் மக்கான் கடும் சாடல்…

உலகிலேயே அதிகளவிலான காற்று மாசுபட்ட நகரம் டெல்லி! ஸ்கைமெட் அதிர்ச்சி தகவல்!

More articles

Latest article