சன் டிவி  செய்தி ஆசிரியருக்கு பிடிவாரண்ட்

வேலூர்:

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா மற்றும் செய்தியாளர் ராஜாகுமார் ஆகியோருக்கு வேலூர் நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு சன் நியூஸ் தொலைகாட்சியில்  தன்னைப் பற்றி அவதூறாக செய்தி ஒளிபரப்பட்டதாக வேலூரைச் சேர்ந்த கெஜராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜா, வேலூர் பகுதி நேர நிருபர் ராஜாகுமார், கியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வழக்கு  வேலூர் ஜெ.எம். நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த நிலையில்,  குற்றம்சாட்டப்பட்ட மேற்படி சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜா, வேலூர் செய்தியாளர்  ராஜாகுமார் ஆகியோர் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்தனர். ஆகவே  அவர்கள் கோர்ட்டில் ஆஜராக  வேலூர் ஜெ.எம். நீதிமன்றத்தில் பிடிவாரணட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
warrant issued against sun tv news editor