சென்னை:
தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான் துவங்கியது. அப்படியும் இரு நாட்கள் மட்டுமே சற்று கனத்த மழை தமிழகம் முழுதும் பெய்தது. அதன் பிறகு மழை இல்லை.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 5 செ.மீ. மழையும், மயிலாடி மற்றும் கன்னியாகுமரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.