கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’.இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘டெனெட்’, ‘வொண்டர் வுமன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெனெட் திரைப்படம் வரும் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதியும், ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.