சன்ரைசரஸ் ஹைதராபாத் முதல் வெற்றி ,மும்பை அணியின் தொடர் தோல்வி
இன்று ஹைதராபாத்தில் IPL 2016 12வது போட்டி சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது. ஹைதராபாத் டாஸ் வென்று பௌலிங் செய்ய முடிவு செய்தது.
PhotoGrid_1461004143155
சென்ற வருட IPL வென்ற மும்பை அணி இந்த வருடம் தடுமாறுகின்றனர் . மும்பை ரசிகர்கள் கவலையாக இருப்பது அவர்கள் சமுக வலைதலைங்களில் தெரிகின்றது . இந்த ஆட்டம் தொடக்கம் முதல் மும்பை முன்னணி வீரர்கள் குப்பில், பட்டீல், ரோஹித் சர்மா மற்றும் ஜோஸ் பட்லர் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனர் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன் எடுத்தது. மும்பை அணியின் ராயுடு(54) மற்றும் க்ருனால் பாண்டிய(49) ஜோடி அணியை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியது . ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் , சரண் மற்றும் ரஹ்மான் ஆகியோரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.
ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஹென்ரிக்ஸ் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது . டேவிட் வார்னர் (90),ஹென்ரிக்ஸ் (27), தீபக் ஹூட (17). ஹைதராபாத் அணியின்இந்த வெற்றி இந்த வருட போட்டியின் முதல் வெற்றியாகும் . மும்பை அணியின் சௌதி சிறப்பாக பண்டு வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ 142/6 (ராயுடு 54,க்ருனால் பாண்டிய 49, சரண் 3/18, புவனேஸ்வர் குமார் 1/17) சன்ரைசரஸ் ஹைதராபாத் 145/3 (வார்னர் 90, ஹென்ரிக்ஸ் 27, தீபக் ஹூட 17, சௌதி 3/24)