சென்னை,
தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் கால அட்டவணையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று வக்பு வாரிய உறுப்பினர் பதவிக்கு தி.மு.க வின் ஆதரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம் முகம்மது அபுபக்கர் தலைமை செயலகத்தில்தேர்தல் அலுவலர் ஆண்டியப்பனிடம் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் திமுக செயல்தலைவர் ஸ்டானிடம் வாழ்த்து பெற்றார்.
அதைத்தொடர்ந்து தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் முகம்மது பஷீரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும், தி.மு.க சார்பில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்தல்:
07.09.2017 (வியாழக்கிழமை) (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
14.09.2017 (வியாழக்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பு மனு சரிபார்த்தல் 15.09.2017 (வெள்ளிக்கிழமை) (முற்பகல் 11.00 மணிக்குள்)
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 18.09.2017 (திங்கட்கிழமை)
(பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள் 19.09.2017 (செவ்வாய்கிழமை)
தேர்தல் அவசியமானால் 04.10.2017 (புதன்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1.ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை 600 001-ல் நடைபெறும்.
05.10.2017 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.