சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நேற்று (எப்ரல் 6ந்தேதி) சென்னை கிண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்படபலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தில் வஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், அந்த சட்ட திருத்தம் உடடினயாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தொடக்கம் முதலே காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள பாஜக இந்த மசோதாவை நிறைவேற்றி, சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 6ந்தேதி) ராமேஷ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு, ராமேஸ்வரம் தாம்பரம் ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த நிலையில் அவருக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவித்திருந்தார். அதன்படி ராமேஸ்வரம் உள்பட பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Video Player
00:00
00:00
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், துணைத்தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப. சிதம்பரம் உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தமிழகத்தை சார்ந்த கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கும் தமிழக மக்கள் நலனுக்கும் எதிராக செயல்படுத்தும் திட்டங்களுக்கு எதிராகவும் வக்பு வாரிய மசோதா திருத்தத்தையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.