வாஷிங்டன்
அமெரிக்காவின் புகழ் பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் ஆசியாவின் இணைய வர்த்தக தளமான ஃப்ளிப்கார்ட் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற வால்மார்ட் நிறுவனம் சில்லறை வர்த்தக துறையில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். பல டிபார்ட்மெண்டல் ஸ்டார் உட்பட உலகெங்கும் பல வணிக தளங்களை இயக்கி வருகிறது. அதே போல ஆசிய நாடுகளில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய இணைய தளங்கள் புகழுடன் உள்ளன. அமேசான் முதல் இடத்திலும், ஃப்ளிப்கார்ட் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 40%க்கும் அதிகமான பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலின் படி வால்மார்ட் இந்த பங்குகளை வாங்கினால் அமேசான் முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்படும் என தெரிய வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை பற்றிய எந்த ஒரு விவரத்தையும் வெளியிட இரு நிறுவனங்களும் மறுத்துள்ளன.
கடந்த சில வருடங்களாகவே வால்மார்ட் இந்தியாவில் கால் பதிக்க கடும் முயற்சி எடுத்து வருவது தெரிந்ததே.