சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீனவர்களின் பாதுகாப்புக்காக வாங்கிய வாக்கிடாக்கியில் அமைச்சர் ஜெயக்குமார் மாபெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். சுமார் ரூ.300 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக தெரிவிததற்கு, அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதலைப் பெற்ற அரசாணை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பாக வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு என எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர அரசாணை வெளியீடு…என குறிப்பிட்டுள்ளார்.